திங்கள், 15 நவம்பர், 2010

நட்பே கடவுள்

கடவுள் நம்பிக்கையே
இல்லாத எனக்கும்
சில நேரங்களில் கடவுள் இருக்கிறாரோ
என என்ன தோன்றுகிறது....
என் தோழர்களை என்னும் போது
இது தான் முற்பிறவி புண்ணியம்
என்கிறார்களோ ...
தோழா
என்தவம் செய்தேன்
நீ எனக்கு நன்பனாய் கிடைக்க...

கவிஞன்

யோசித்து பார்க்கிறேன்
நான் கவிஞனா என்று
இல்லை
எந்த தலைப்பையும்
மனதில் வாங்கி எழுதுபவனே கவிஞன்...
நானோ
என் மனதை விட்டு நீங்காத
நட்பின் நினைவுகளால் அல்லவா
கிறுக்குகிறேன்
கவிதை என்ற பெயரில்....
ஆனால் என்னையும் கவிஞன் என்று
ஏற்றுகொள்கிறார்கள் சிலர்
ஏனென்றால்
அவர்களுக்கும் என்னை போலவே
நட்பை தவிர முதன்மையானது
இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை என்பதால்....