செவ்வாய், 7 மார்ச், 2017

அனைத்திலும் நீயே ..

நெடுநாள் கழித்து எட்டிப் பார்த்தேன் 
வலைப்பதிவை ..
திறந்த வுடன் கை சென்றது 
உன்னைப் பற்றி  எழுதவே..
ஆம் ..
மனதினில் தோன்றும் கனவுகளும்  உன் நினைவுகளே ..
என் விரல்களில் தவழும் எழுத்துக்களும் உன் அசைவுகளே ..
மகிழ்ச்சியை என்னுள் இருமடங்காக்கினாய் 
என்னால் செய்யமுடியாததையும் செய்து 
எனக்கும் .. 
என் மனம் விரும்பியவர்களுக்கும் ....
அனைத்திலும் என்னோடு நீ ..
நீக்கமுடியா கனவும் நீ..
வந்தாய் வாழ்கை துணையாய் !!
கலந்தாய் வாழ்வின் முழுமையாய் !!!


பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து - அன்பின் வெளிப்பாடு

இது வெறும் பொங்கல் மகிழ்ச்சியை வெளிபடுத்தும் வாழ்த்துஅட்டை அல்ல

உறவுகளின் உள்ள உணர்வின் வெளிப்பாடு ..

என்றுமே நினைக்காத தபால் காரரும், தபால் அலுவலகமும்

மார்கழி மாத இறுதி நாட்களில் மட்டும் கடவுளாகவும், கோவிலாகவும்

புலப்படுகின்றன கண்களுக்கு காரணம்

வருடத்திற்கு ஒரு முறை ஈடுஇணையற்ற

தம் உறவினர்களிடம் இருந்து வரும்

அன்பு பரிசை காலம் தவறாது வந்து அளிப்பதால்...

ஆனால் இன்றோ நிலைமையே வேறு

அதை எண்ணி பார்க்கும் நேரம் கூடநமக்கு இல்லை ..

அத்தகைய சின்னஞ்சிறு மகிழ்ச்சியை அழித்த பெருமை

மின்னஞ்சல்களையும், குறுந்தகவல்களையுமே சாரும்...

ஆயிரம் குறுந்தகவல் அனுப்பினாலும் கிடைக்காத மகிழ்ச்சி

ஒரு வாழ்த்து அட்டையில் கண்டிப்பாக கிடைக்கும்

என் மருமகனுக்கு என்ற

நம்பிக்கை எனக்கு உண்டு ஏனென்றால்

லியை உணர்ந்தவனுக்கு தான் அன்பின் இனிமை புரியும்

என்றும் அன்புடன் ( பொங்கல் வாழ்த்துகளுடன் )





செவ்வாய், 6 டிசம்பர், 2011

பெண்மை

பெண்மை.....

சில இளைஞர்களுக்கு இன்னும்
கடவுள் மீது
பக்தி இருப்பதற்கு
காரண கர்த்தா!!!

புதன், 20 ஏப்ரல், 2011

பொறியாளன்

வருடத்தில் ௩௬௫ நாட்களும்
பிரசவ வலியை உணர்கிறேன்..
பணியில் பிரச்சினை வரும்போது அதை
புலனாய்ந்து தீர்வு கொடுக்கும்
ஒரு பொறியாளனாக
செயல்படும்போது..

திங்கள், 15 நவம்பர், 2010

நட்பே கடவுள்

கடவுள் நம்பிக்கையே
இல்லாத எனக்கும்
சில நேரங்களில் கடவுள் இருக்கிறாரோ
என என்ன தோன்றுகிறது....
என் தோழர்களை என்னும் போது
இது தான் முற்பிறவி புண்ணியம்
என்கிறார்களோ ...
தோழா
என்தவம் செய்தேன்
நீ எனக்கு நன்பனாய் கிடைக்க...

கவிஞன்

யோசித்து பார்க்கிறேன்
நான் கவிஞனா என்று
இல்லை
எந்த தலைப்பையும்
மனதில் வாங்கி எழுதுபவனே கவிஞன்...
நானோ
என் மனதை விட்டு நீங்காத
நட்பின் நினைவுகளால் அல்லவா
கிறுக்குகிறேன்
கவிதை என்ற பெயரில்....
ஆனால் என்னையும் கவிஞன் என்று
ஏற்றுகொள்கிறார்கள் சிலர்
ஏனென்றால்
அவர்களுக்கும் என்னை போலவே
நட்பை தவிர முதன்மையானது
இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை என்பதால்....

ஞாயிறு, 18 ஜூலை, 2010

விடலை பருவம்

மனமே
வருங்கால மனமே
அனுபவத்தில் சொல்கிறேன் கேட்டுகொள் ...
எதை வேண்டுமானாலும் இழந்தால் திரும்ப பெறலாம்
ஒன்றை தவிர
விடலை பருவ சந்தோசத்தை தவிர ...
ஆதலால்
ஒருபோதும் இழந்துவிடாதே
யாருக்காகவும் ....எதற்க்காகவும்........
காலங்கள் ஓடினாலும்
அந்த நட்பின் இனிமை மட்டும்
இன்னும் என் நெஞ்சுக்குள்ளே இருந்து
என்னை கொல்லாமல் கொல்லுகிறது
இறந்து போன இனிய நினைவுகளை வைத்து .....
இப்படிக்கு
விடலை பருவ சந்தோஷத்தை
முழுமையாய் அனுபவித்து
இன்னும் அதன் பிடியில் இருந்து
மீள முடியாது
தவிக்கும் பிஞ்சு நெஞ்சம்....