செவ்வாய், 20 ஏப்ரல், 2010

வானம்

இன்று வரை தேடுகிறேன்
உன்னை அடையகூடிய பாதையை

செவ்வாய், 13 ஏப்ரல், 2010

தமிழ் வெறி

எண்ணி பார்க்கின்றேன்
தமிழனாய் பிறந்தது யார் குற்றமென்று .......
அது அவர்கள் குற்றமா என்று
பின்பு தான் புரிந்தது ......
தமிழனாய் பிறந்தது குற்றமல்ல
தமிழ்நாட்டில் பிறக்காதது தான் குற்றமென்று ......
ஏன் எங்கள் சகோதரர்களுக்கு மட்டும்
இவ்வளவு சோதனைகள் .....
தவறு அவர்கள் மேல் உள்ளதாலயா
அதுவும் சரி தான்
தனக்கென்று போராட கிடைத்த
தானய தலைவனுக்கு கூட
ஆதரவாய் நிற்காமல்
ஒதுங்கியதற்க்காகவா
நீ கொடுக்கும் தண்டனை என்று ........

நட்பின் வரையறை

புரியவில்லை
உனக்கும் எனக்கும் என்ன பந்தம் என்று .....
எண்ணி பார்க்கின்றேன்
எழுத்தறிவித்தவன்
இறைவன் என்றால்
நீ தான் எனக்கு
இறைவன் ....
பசி போககுபவள்
தாய்என்றால்
நீ தான் எனக்கு
தாய் ......
நல்வழி படுத்துபவர்
தந்தை என்றால்
நீ தான் எனக்கு
தந்தை ......
அன்பு செலுத்துபவர்
சகோதரன் என்றால்
நீ தான் எனக்கு
சகோதரன் .......
எண்ணி பார்க்கிறேன்
இவை எல்லாமே இரத்த வழி உறவுகள் ஆயிற்றே .......
ஆனால் நாம் பிறந்ததோ வெவ்வேறு
கருவறைகள் ஆயிற்றே என்று .......
பின்பு தான் கண்டு கொண்டேன்
நமக்கு உள்ள பந்தம்
ஒரு ஜென்மத்தோடு தோன்றி மறைவது அல்ல என்று ..
காலம் காலமாய் ஜென்ம ஜென்மமாய்
தொடர்ந்த
தொடர போகும் உறவு என்று ......
ஆனாலும் தவித்தேன்
இந்த உறவுக்கு பெயர் என்னவென்று தெரியாமல் ......
பின்பு தான் அறிந்தேன்
இதற்கு ஒரே பெயர் தான் உண்டு என்று .......
அது தான் நட்பு என்று .......

மழை

விண்ணில் தோன்றி
மண்ணில் மறையும்
எங்களின்
உயிர்த்துளி
நீ தானே .....
எங்களை வாழவைத்தாய்
வாழ்வதற்க்கான ஆதாரத்தையும்
வைத்தாய்
பிறகு ஏன்
உன் மக்காளுக்கு
உன் மேல் இவ்வளவு கோபம்
நீ மண்ணில் விழுந்தவுடனே
உன்னை கை கூப்பி வரவேற்காமல்
வெறுக்கிறார்கள் வார்த்தைகளால் ......
இதை தான் எங்கள் சான்றோர்கள்
பெத்த மனசு பிஞ்சு பிள்ளை மனசு கல்லு
என்றார்களோ ......


குற்ற உணர்வு

உன்னை தட்டி கேட்க
எங்களுக்கு
துணிவு இல்லை
மாதம்மும்முறை
ஏன் வரவில்லை என்று.......
காரணம்
வருடம் ஒரு முறை கூட நீ
வர முடியாத அளவுக்கு
உன் ஆதிமூலத்தை
வெட்டி சாய்த்து கொண்டிருப்பதே
எங்கள் சகாக்கள்
என்று தெரிந்ததால் தான் ........
எப்போது உணர போகிறார்கள்
இவர்கள்
அழிப்பது உன்னை அல்ல .....
தங்கள் எதிர்கால
சந்ததியினரின்
உயிர் என்பதை .......


மறுக்கிறது

நெஞ்சு துடிக்க மறுக்கிறது
கண்கள் தூங்க மறுக்கிறது
வயிறு பசிக்க மறுக்கிறது
செவிகள் கேட்க மறுக்கிறது
ஆனால்
இதயம் மட்டும் மறக்கவில்லை
உன்னை நினைக்க
இது தான்காதலோ ....

தமிழ் தாய்க்கு பிறந்த நாள்

உள்ளம் உவகையால்
பெருக்கெடுத்து ஓடுகிறது
உன் பிறந்த நாளை எதிர் நோககி.....
மாதராய் பிறப்பதற்கே
மாதவம் செய்திட வேண்டும் என்று
எங்கள் முன்னவர்கள் பறைசாற்றிருக்கும் போது.......
நாங்கள் என்ன பெருந்தவம்
செய்தோம் என்று
ண்ணிபார்க்கிறேன் ........
புலப்படவில்லை
உந்தன் பிள்ளைகளாய்
மூவேந்தர்களும் கொடி நாட்டிய
இந்த மண்ணில் நாங்களும் பிறப்பதற்கு ........
உன்னை புக்ழ அகராதியை தேடினேன் ......
வார்த்தைகளுக்காக ....
பின்பு தான்
தெரிந்தது
உன்னை புகழ
வார்த்தைகளே கிடையாது என்று .......
அதனாலவோ என்னோவோ
வாழ்த்து கூற வந்து
வாழ்த்தாமலே
விடை பெறுகிறேன் ........



திங்கள், 12 ஏப்ரல், 2010

வருண தாண்டவம்

புரிகிறது
தந்தை ஸ்தானத்தில் வைக்க வேண்டிய
உன்னை மதிக்காமல் இழிவு படுத்தியதற்காக தான்
இந்த வேதனையை நாங்கள் அனுபவிக்கின்றோம் என்று ....
இருந்தாலும்
தந்தையே தன் சேயை கொடுந்தீயில்
வாட்டிகொல்வது போல ஆகாதா
உனது இந்த செய்கை ......
மாதம் மும்மாரி

நாங்கள் கேட்கவில்லை .....
ஒரு மாரியாவது .....
பொழிய கூடாதா..
என்பதே

எங்கள் வினா .......

ஞாயிறு, 11 ஏப்ரல், 2010

சாபக்கேடு

முற்பிறவியில் என்ன பாவம்
செய்தேனோ
இப்பிறவியில் இப்படியொரு
பிறப்பை கொடுத்தாய்
மானுட ஜென்மமாய்......
இந்த சுய நல கூட்டதோடு
வாழ்வதற்கு ......
இறைவா ?

தமிழ் என் உயிர்

பசி மறந்தது
உன்னை பற்றி பேசும் போது
செவிகளில் தேன்பாய்ந்தது
உன்னை பற்றி கேட்கும் போது
அதே சமயம்
உயிர் போனது உன் நாட்டினில் உன்
நிலைமையை காணும் போது
ஏன் இந்த அவலம் .......
பெற்ற மாக்களே
உன்னை மறந்து விட்டு
அந்நிய தாயை விரும்பி வாடகைக்கு
எடுத்து கொண்ட அவலம்.......
எத்தனை நாட்கள் தொடரும் இந்த கொடூரம்.......
பன்மொழி புலமை இயன்றியாமையே ......
ஆனால் நெஞ்சு குமுறுகிறது
அது உன்னை அவமதித்துவிட்டு
அரங்கேறினால் ..........


அன்பின் வெளிப்பாடு

உன்னை பார்க்கும் முன்பு வரை
அன்பு என்றால்
அது
தாய்மை என்று எண்ணினேன் .....
பிறகு தான் தெரிந்தது
அதற்கு நட்பு என்று
இன்னொரு பொருளும் உண்டு என்று.......

பேரழகி

பெண்மைக்கு அழகு
புறம் என்று தான் எண்ணியிருந்தேன் ........
நீ
என்னை கடந்து செல்லும் வரை ......
பின்பு தான் அறிந்தேன்
அது தவறு என்று ........
என்னவளே
மன்னித்துவிடு ....
உன் வயது பேரழகிகளை
காயபடுத்தியதற்காக .....
உன்னை பார்பதற்கு முன் .....

பிஞ்சின் துக்கம்

கருவறையிலிருந்து வந்தவுடனே
ஏன் இந்த கல்லறை பயணம்

மனவேதனையா
வேண்டவே வேண்டாம்
இது மூவேந்தர்களும் கொடி நாட்டிய மண்ணே....
என்ன
அன்று அவர்கள் மக்களுக்காக போரிட்டார்கள் .......
இன்றோ
இவர்கள் போரிடுவதே மக்களுக்கு எதிராக தான் .....
அவ்வளவு தான் வித்தியாசம் .......

பாரத தாயே !!

பாரத தாயே .....
நினைத்து பார்க்கிறேன்
புலப்படவில்லை
என்ன பாவம செய்தோம் நாங்களென்று .....
காவேரி தொட்டு ஈழம் வரை
ஏன் இத்தனை பாரபட்சம்
எங்களுக்கு மட்டும்.....

உன் பாதத்தின் அடியில் கிடப்பத்தால்
நினைத்து விட்டாயோ நாங்கள்
தீண்ட தகாதவர்கள் என்று
இல்லை ..... ஒருபோதும் இல்லை .......
இது
வந்தாரை வாழவைக்க
தன்னுயிரையே நீத்த கூட்டம்
அதனாலேயே
அடி மட்டத்திற்கு வந்த கூட்டம்.......
என்பதை மட்டும்
மறந்து விடாதே....

நட்பின் இலக்கணம்

தன் வயது இளைஞன்
குருவாக அமைவது
இவ்வளவு இன்பமா !!!
நினைத்து பார்கிறேன் வள்ளுவன் கூற்றை.......
நான் என்தவம் செய்தேன்
இத்தகைய பாக்கியத்தை
நீ எனக்கு தருவதற்கு.........
உன்னை நண்பனாய் அடைவதற்கு .......

தாய்மை காப்போம்

பெற்ற தாயே தன் சேயை பேணி காப்பது
முதல் ஐந்து வருடங்களே.......
ஆனால் நீ ஏன் எந்த பந்தமும் இன்றி
உன் மூச்சை தந்து
எங்களுக்கு சுவாச உயிர் ஊட்டுகிறாய்
நாங்கள் சாகும் வரை.......
உன் உயிரை எடுப்பது
நாங்கள் என்று தெரிந்தும் நீ செலுத்தும் அன்பு
தாய்மையினும்
மேலன்றோ !!!
அது ஏன் உன் மாக்களுக்கு
தெரியவில்லை .....
நெஞ்சு கொதிக்கிறது நினைக்கும் போதே !!

மன அறை

தோன்றிய கருவறை வேறு
மறைய போகும் கல்லறையும் வேறு
ஆனால் வாழ்வதோ ஒரே அறையில்
நட்பு யென்னும் மன அறையில் ....

நட்பு -

தேடி பார்த்தேன் அகராதியை
கண்ணகியை கற்புக்கு நிகராக விமர்சித்தவர் யாரென்று ......
கிடைத்தால் மார்தட்டி கேட்பேன்
என் நண்பனை நீ பார்க்க வில்லையா என்று .......



சனி, 10 ஏப்ரல், 2010

விடலை காதல்

கையெழுத்தை திருத்தியது
தலைஎழுத்தை மாற்றியது
இது தான் காதலோ ?

நெஞ்சு குமுறுகிறது

நூறு கோடி மக்கள் உள்ள நாட்டில்
எவருக்கும் துணிவு இல்லை போராடுவதற்கு ...
அந்நிய வங்கியில் தங்கள் பணம்
முடங்கி கிடக்கிறதே கருப்பு பணமாய்
என்பதை எண்ணி !
நெஞ்சு குமுறுகிறது நினைத்தாலே !

தமிழ் எங்கே?

நெஞ்சு குமுறுகிறது
தமிழனாய் பிறந்ததை எண்ணும் போது !
தமிழ்நாட்டில் தமிழுக்கு கொடுக்கும் மரியாதையை எண்ணும் போது !
என்ன பாவம் செய்தாலோ தமிழன்னை ?
இத்தகைய புண்ணியம் செய்த மக்களை தம் மாக்களாய் பெறுவதற்கு
இது
தமிழன்னைக்கு மட்டுமல்ல !
தமிழுக்கே கிடைத்த சாபக்கேடு !