புதன், 20 ஏப்ரல், 2011

பொறியாளன்

வருடத்தில் ௩௬௫ நாட்களும்
பிரசவ வலியை உணர்கிறேன்..
பணியில் பிரச்சினை வரும்போது அதை
புலனாய்ந்து தீர்வு கொடுக்கும்
ஒரு பொறியாளனாக
செயல்படும்போது..

திங்கள், 15 நவம்பர், 2010

நட்பே கடவுள்

கடவுள் நம்பிக்கையே
இல்லாத எனக்கும்
சில நேரங்களில் கடவுள் இருக்கிறாரோ
என என்ன தோன்றுகிறது....
என் தோழர்களை என்னும் போது
இது தான் முற்பிறவி புண்ணியம்
என்கிறார்களோ ...
தோழா
என்தவம் செய்தேன்
நீ எனக்கு நன்பனாய் கிடைக்க...

கவிஞன்

யோசித்து பார்க்கிறேன்
நான் கவிஞனா என்று
இல்லை
எந்த தலைப்பையும்
மனதில் வாங்கி எழுதுபவனே கவிஞன்...
நானோ
என் மனதை விட்டு நீங்காத
நட்பின் நினைவுகளால் அல்லவா
கிறுக்குகிறேன்
கவிதை என்ற பெயரில்....
ஆனால் என்னையும் கவிஞன் என்று
ஏற்றுகொள்கிறார்கள் சிலர்
ஏனென்றால்
அவர்களுக்கும் என்னை போலவே
நட்பை தவிர முதன்மையானது
இவ்வுலகில் வேறு எதுவும் இல்லை என்பதால்....

ஞாயிறு, 18 ஜூலை, 2010

விடலை பருவம்

மனமே
வருங்கால மனமே
அனுபவத்தில் சொல்கிறேன் கேட்டுகொள் ...
எதை வேண்டுமானாலும் இழந்தால் திரும்ப பெறலாம்
ஒன்றை தவிர
விடலை பருவ சந்தோசத்தை தவிர ...
ஆதலால்
ஒருபோதும் இழந்துவிடாதே
யாருக்காகவும் ....எதற்க்காகவும்........
காலங்கள் ஓடினாலும்
அந்த நட்பின் இனிமை மட்டும்
இன்னும் என் நெஞ்சுக்குள்ளே இருந்து
என்னை கொல்லாமல் கொல்லுகிறது
இறந்து போன இனிய நினைவுகளை வைத்து .....
இப்படிக்கு
விடலை பருவ சந்தோஷத்தை
முழுமையாய் அனுபவித்து
இன்னும் அதன் பிடியில் இருந்து
மீள முடியாது
தவிக்கும் பிஞ்சு நெஞ்சம்....

வியாழன், 15 ஜூலை, 2010

ஆசான்

வாழ்கையில் பல நபர்கள் வந்தார்கள்
ஆசிரியர்கள் என்ற பெயரில்
எனக்கு நல்லுரைகளை போதிக்க .....
ஆனால் ஏற்று கொள்ள முடியாது தவித்தது என் மனம்
காரணம் அவர்கள் கடைபிடிக்க முடியா ஒன்றை
என் மேல் திணித்ததால்....
அதனாலோ என்னவோ
அவர்களை வெறுத்த என் மனம்
உன்னை மட்டும் ஏற்று கொண்டது
என் ஆசானாய்.....
நண்பன் என்ற போர்வையில்
நீ வந்ததனால் ......

வியாழன், 13 மே, 2010

தமிழே முதன்மை

இத்திரு நாட்டில்
எல்லா பிரிவினரும்
தத்தம் இனத்தையே முதன்மையாய்
கொள்ளும்போது
தமிழன்
மட்டும் ஏன் தமிழனாய்
இருக்க முற்படுவதில்லை ......
தமிழன்னை தான்
நம்மை பெற்றவள்
வளர்ப்பவள்
என்றும் காப்பவள் ......
என்பது என் மக்களுக்கு
எப்போது புரிய போகிறது ..
பாரத தாய்க்கு
28 மகன்கள் இருக்கிறார்கள் .....
ஆதலாலோ என்னவோ
அவள் நம்மை எப்போதும்
காலடியிலேயே வைத்திருக்கிறாள்......
ஆனால் நம் தமிழன்னைக்கு
நீ ஒரே மகனல்லவா
அவள்
உன்னை நெஞ்சினில் அல்லவா வைத்திருக்கிறாள் .....
அது எப்போது உனக்கு
புரிய போகிறது ......

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

வானம்

இன்று வரை தேடுகிறேன்
உன்னை அடையகூடிய பாதையை